மேட்டூரில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் பேட்டி..,

சேலம்:

சேலம் மாவட்டம், மேட்டூர். : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து விரைவில் போராட்டம் நடைபெறும். லாரி உரிமையாளர் சம்மேளன மாநில தலைவர் முருகன் மேட்டூரில் தெரிவித்தார்.

இது குறித்து முருகன் கூறியதாவது: –

தமிழகத்தில் ஆட்டோ முதல் லாரிகள் வரை 20 லட்சம் சரக்கு வாகனங்கள் இயக்கப்படுகின்றன. பெட்ரோல் , டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. சுங்க கட்டணம் 5 முதல் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை ஜிஎஸ்டி – குள் கொண்டு வரவேண்டும். சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாத இறுதியில் சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com