நள்ளிரவில் நடந்த கொடூரம்.. தண்டவாளத்தில் நின்றிருந்த 7 பேர் பலி..!

செகந்திராபாத்:

செகந்திராபாத்தில் இருந்து கவுஹாத்திக்கு அதிவிரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இதையடுத்து படுவா என்ற கிராமம் வழியாக சென்றபோது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் நின்றுள்ளது.

.அப்போது, இந்த ரயிலில் பயணம் செய்த சிலர், ரயிலை விட்டு கீழே இறங்கி அருகே இருந்த தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தனர். அந்த நேரம் கொல்காத்தா நோக்கி சென்ற கொனார்க் விரைவு ரயில் இவர்கள்மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து பற்றி அறிந்து அங்கு வந்த ரயில்வே போலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க முயற்சியில் ரயில்வே போலிஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்திற்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்தள்ளார்.

அதேபோல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஜென் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Kaspersky Premium

Champions don't take risks, why should you?