சேலம்:
மேட்டூர் அடுத்த நீதி புறத்தில் விவசாய கிணற்றில் விழுந்து இறந்த யானையின் சடலத்தை கயிறு கட்டி மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டம். மேட்டூர் அருகே உள்ள நீதி புரத்தில் வட பர்கூர் வனப்பகுதியில் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த யானை ஒன்று மயில்சாமி என்பவருக்குச் சொந்தமான தோட்ட கிணற்றில் விழுந்துள்ளது. அதிகாலையில் யானை விழுந்ததால் ஆண் யானையா, பெண் யானையா என்பது தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மற்றும் தீயணைப்பு படையினர் கிணற்றில் உள்ள நீரை இறைத்து வெளியேற்றினர். பின்னர் கயிறு மூலம் கட்டி கிணற்றில் விழுந்த யானையின் சடலத்தை மேலே கொண்டு வரும் பணியில் வனத்துறை மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் யானையின் சடலத்தை பார்க்க நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கூடியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.