சேலம்:
ஆத்தூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் இறந்தார். 7 பேர் காயம் அடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து லாரி ஒன்று தேங்காய் லோடு ஏற்றிக்கொண்டு வாழப்பாடி சென்று கொண்டிருந்தது. லாரியை வாழப்பாடி முல்லை நகரை சேர்ந்த தமிழழகன் (48). என்பவர் ஓட்டினார்.
லாரியில் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த முத்து (52), பெரியசாமி (37), வாழப்பாடி பகுதியை சேர்ந்த துரைசாமி (53), பூபதி (35) உள்பட 7 பேர் இருந்தனர். ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் சமத்துவபுரம் பகுதியில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது.
இதில் லாரியில் இருந்த தேங்காய்கள் சாலையில் சிதறின. காயம் அடைந்த டிரைவர் உள்பட 8 பேரையும் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பூபதி என்பவரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆஸ்பத்திரிக்கு வரும் வழியில் பூபதி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து ஆத்தூர் ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்