சென்னை:
25 வயது கூட ஆகாத இளைஞர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் விளையாடி விட்டு வந்த பிறகு நொறுக்குத் தீனி சாப்பிட்டு விட்டு குளிர் பானம் அருந்திய சதீஷ் என்ற இளைஞருக்கு திடீரென நெஞ்சுவலி மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. பின் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இருபத்தி ஐந்து வயது கூட ஆகாத இளைஞருக்கு திடீரென நெஞ்சு வலி மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இளைஞரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.