திண்டுக்கல்:
திண்டுக்கல் மலையடிவாரத்தில் அமைந்துள்ளதுபத்திரகாளியம்மன் கோயில்.
இக்கோயில் சித்திரை திருவிழா ஏப்.1ல் சுவாமி சாட்டுதலுடன் துவங்கியது. ஏப்.4 ல் கொடியேற்றம், 5ல் பூச்சொரிதல் நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியாக நேற்று ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி, பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இன்று (ஏப்.13) முளைப்பாரி ஊர்வலம், இரவு 9:00 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது.
இதே போல் திண்டுக்கல் தெற்கு ரத வீதி பாதாள காளியம்மன் கோயில் பங்குனி உற்ஸவ விழா மார்ச் 31 ல் பூ அலங்காரத்துடன் துவங்கி நடந்தது.
நேற்று முன்தினம் ஊஞ்சல் உற்ஸவம், நேற்று மாலை தெப்ப உற்ஸவம் நடந்தது.
அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.