காதலன் திருமணத்தில் காதலிக்கு அடி உதை; முடியை பிடித்து இழுத்து செருப்பால் அடித்த உறவினர்கள்..!

தெலங்கானா:

ஏழு ஆண்டுகளாக காதலித்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்யவிருந்த காதலனை தடுப்பதற்காக சென்ற பெண்ணுக்கு மணமகனின் உறவினர்களால் நேர்ந்த அவலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தெலங்கானாவின் மெஹ்பூபாபாத் மாவட்டத்தில் உள்ள கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் மணமகன் ஸ்ரீநாத். இந்த நபரும் ரஜனி என்ற பெண்ணும் 2015ம் ஆண்டு முதலே காதலித்து வந்திருக்கிறார்கள்.

ரஜனியை திருமணம் செய்வதாகச் சொல்லிவிட்டு வேறொரு பெண்ணை மணமுடிக்க துணிந்திருக்கிறார் ஸ்ரீநாத். இது குறித்து அறிந்த ரஜனி, கல்யாணத்தை நிறுத்த எண்ணியுள்ளார். அதன்படி கடந்த வெள்ளியன்று கம்மம் பகுதியில் உள்ள மண்டபத்தில் வைத்து ஸ்ரீநாத்துக்கும் வேறொரு பெண்ணும் திருமணம் நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

அங்கு சென்ற காதலி ரஜனி ஸ்ரீநாத்திடம் நியாயம் கேட்டிருக்கிறார். மண்டபத்துக்கு வருவதற்கு முன்பு போலிஸிடம் புகாரளித்து அவர்களையும் கையோடு அழைத்தும் வந்திருக்கிறார். ஆனால் ஸ்ரீநாத்தின் உறவுக்கார பெண்கள் ரஜனியை தாக்கி அவரது தலைமுடியை பிடித்து இழுத்து மண்டபத்துக்கு வெளியே விரட்டி காலணிகளாலும் அடித்து துன்புறுத்தியிருக்கிறார்கள்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் போலிஸார், பொதுமக்கள் உட்பட பலரது கண் முன்னே நடந்தும் எவரும் தடுக்காமலும், கேள்வி ஏதும் எழுப்பாமலேயே இருந்திருக்கிறார்கள். இருப்பினும் ஸ்ரீநாத் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணமுடித்திருக்கிறார். ஆனால் ரஜனி தாக்கப்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!