சேலம்:
ஆத்தூர் அருகே உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டன்பாளையத்தில் உலகிலேயே மிகப்பெரிய முருகன் (146) சிலை நிறுவப்பட்டுள்ளது. மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் சிலையை விட 6 அடி உயரம் கொண்டதாகும்.
ஆத்தூரை சேர்ந்த முத்து நடராஜன் என்பவர் சிலை வைக்க ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் தொடர்ந்து அவரது மகன்கள் திருப்பணியை மேற்கொண்டனர்.
கோவில் திருப்பணி குழு நிர்வாகி ஸ்ரீதர் ஏப்ரல் 6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என தெரிவித்திருந்தார். அதன்படி கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.