ஈரோடு:
அந்தியூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கிருஷ்ணாபுரம் இப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக இப்பகுதியில் குடிநீர் வழங்கவில்லை இது குறித்து கெட்டி சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளரிடம் பொதுமக்கள் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை இதனை கண்டித்து இன்று காலை அந்தியூர் பர்கூர் ரோட்டில் தண்ணீர் பந்தல் என்னுமிடத்தில் பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்
பின்னர் அங்கு வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்களுக்கு தேவையான எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதில்லை எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் தெரிவித்தனர்
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர் திமுக எம்எல்ஏ வெங்கடாசலம் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்தியூர் பர்கூர் ரோட்டில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.