பிரபல நடிகரின் மனைவி குற்றச்சாட்டு..!

மர்ம நபர்கள் ஆபாசமாக வீடியோக்களை சமூக வளைதளத்தில் அனுப்புவதாக நடிகர் நகுலின் மனைவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகர் நகுல் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். நகுல் மற்றும் ஸ்ருதி ஜோடி சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவுகளை மேற்கொள்வதன் மூலமும் பிரபலமான ஜோடிகளாக இருந்து வருகின்றனர். குறிப்பாக நகுல் மற்றும் ஸ்ருதி வாட்டர் பெர்த் என்ற முறையில் பெண் குழந்தையை பெற்றெடுத்தது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வீடியோ வைரலாக பேசப்பட்டது.

இந்நிலையில் நகுல் மனைவி ஸ்ருதியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மர்ம நபர்கள் சிலர் ஆபாசமாக வீடியோக்களை மற்றும் கருத்துக்களை அனுப்புவதாக குற்றம் சாட்டியுள்ளார். முதல் முறை இல்லாமல் பல முறை இதுபோன்று ஆபாச வீடியோக்களும் கருத்துக்களையும் அனுப்பி தொந்தரவு செய்வதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக பெண்களின் ஆடை மற்றும் ஒழுக்கத்தைப் பற்றி எப்போதும் தவறான கருத்துக்களை பதி விடுகின்றனர் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதுவும் நவீன ஆடைகளை அணியும் பெண்களுக்கு இது போன்று ஆபாச வீடியோவை ஆண்கள் அனுப்பலாம் என எப்படி நினைக்கிறார்கள் என தெரிவித்துள்ளார். தன்னைப் போன்ற பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். பெரும்பாலும் இது போன்ற பதிவுகளை தவிர்த்து சமூக வலைதளப் பக்கத்தில் புகார் அளித்ததன் மூலம் அந்த பக்கத்தை பிளாக் செய்வதே தொடர்ந்து செய்து வருவதாகவும், இருப்பினும் தொடர்ந்து ஆபாச வீடியோக்கள் வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கடுமையான விதிகள் கொண்டுவரப்படும் வரை இது போன்ற விஷயங்களில் மாற்றம் ஏற்படாது என கருத்து தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பலரும் புகார்கள் அளித்தும், காவல்துறையில் எந்த வித நடவடிக்கைகள் இல்லை என தெரிவித்துள்ளார். பெரும்பாலானோர் பயப்படுவதாகவும் , புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், இது போன்ற செயல்களுக்கு எதிராக குரல் கொடுக்க நினைப்பவர்கள் சோர்வடைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Kaspersky Premium

Champions don't take risks, why should you?