தமிழ் புத்தாண்டு, புனிதவெள்ளி உள்ளிட்ட தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நாகை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட ஊர்களுக்கு 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
அதேபோல், சென்னைக்கு திரும்ப ஏதுவாக ஏப்ரல் 17ம் தேதி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
in
தமிழகம்