கோயம்புத்தூர்:
கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூர் மூங்கில் பள்ளம் பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாட்டம் நடைபெற்று வருவதாகக் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் அங்கு சேவல் சண்டை நடத்தி சூதாட்டம் நடைபெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட சேவல்கள் பறிமுதல் செய்த போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரப்பகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த மனோஜ், ஹரிஹரன், மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் சீரபாளையம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் வழுக்குப்பாறை பகுதியைச் சேர்ந்த யுவராஜ் ஆகிய 5 பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
in
க்ரைம்