சென்னை:
பொது இடங்களில் மக்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும். பொது இடங்களிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் முகக்கவசம் அணிவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்; கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி ஒன்றே சிறந்த ஆயுதம். தமிழ்நாட்டில் 41.66% பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது; தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.