13 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை…. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு..!

சென்னை:

கொரோனா பாதிப்பால் பாடங்களை முடிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் நடப்பு ஆண்டில் 10 முதல் 13 நாட்களுக்குத்தான் பள்ளி மாணவர்களுக்கு கோடைவிடுமுறை அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

மேலும் அடுத்த ஆண்டு முதல் வழக்கம் போல கோடைவிடுமுறை அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பங்கேற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், ‘ கோடை காலத்தில் பள்ளி நேரத்தை குறைக்க வேண்டும் என்றும் குறைந்தது சனிக்கிழமைகளில் பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பள்ளிக் கல்வித்துறைக்கு வந்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக ஒன்றரை ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டதால் பொதுத் தேர்வு எழுத வேண்டிய மாணவர்களுக்கான பாடங்களை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது குறைக்கப்பட்ட பாடங்கள் போக மீதம் உள்ள பாடங்களை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால் இந்த ஆண்டு மே மாதம் 10 அல்லது 13 நாட்கள் மட்டுமே பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும். அடுத்த ஆண்டில் வழக்கம் போல ஒன்றரை மாதம் வரை கோடை விடுமுறை விடப்படும். ஆசிரியர் சங்கங்களுடன் நடந்த கருத்துகேட்பு கூட்டத்தில் அவர்கள் தெரிவித்த கோரிக்கைகளில் அரசாணை எண் 101, 108 ஆகியவற்றை மறு சீரமைப்பு செய்வது குறித்தும் முதல்வர் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்றார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Kaspersky Premium

Champions don't take risks, why should you?