சேலம்:
ஏற்காடு பேருந்து நிலையம் அருகே பிரபல தனியார் தங்கும் விடுதி இயங்கி வருகிறது. இந்த தனியார் தங்கும் விடுதியில் விபச்சாரம் நடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து டிஎஸ்பி தையல்நாயகி தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது தங்கும் விடுதி மேலாளர் சேலம் அங்கம்மாள் காலனி பகுதியைச் சேர்ந்த சேதுராமன் மதன் நடராஜன் 65 என்பவர் தலைமையில் ஆன்லைன் மூலமாக விபச்சாரம் செய்வது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்காடு மஞ்சகுட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன் ரஞ்சித் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்ட கோயம்புத்தூர் வேலாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமன் மகள் ரம்யா 27 ஆகிய மூவரையும் ஏற்காடு காவல் நிலையம் அழைத்து வந்து இன்ஸ்பெக்டர் ரஜினி விசாரணை செய்து நடராஜன் மற்றும் ரஞ்சித் ஆகியோரை சிறையில் அடைத்தனர். மேலும் ரம்யா காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.