பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு..!

நெல்லை:

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் நேற்று இரவு பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது. இது குறித்து பேருந்து நிலைய அதிகாரி காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து அங்கு துணை ஆணையர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பேருந்து நிலையத்தின் கீழ் தளத்திற்கு செல்லும் வழியில் உள்ள சுவரில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளதை அறிந்த அவர்கள் தடயங்களை சேகரித்ததுடன், அருகே கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இரவு நேரம் என்பதால் பயணிகள் யாரும் அங்கு இல்லை, மேலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. வெடிகுண்டு வீசிய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பாளையங்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!