வெப்பத்தை தணிக்க வீட்டின் மீது தண்ணீர் ஊற்றிய சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை..!

திருப்பத்தூர்:

ஆம்பூர் சுண்ணாம்பு காளை பகுதியைச் சேர்ந்தவர் சனாவுல்லா. இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். சனாவுல்லாவும் அவரது மகன் முகமது ஜக்கரியாவும் பெங்களூரில் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர்.

தற்போது ரம்ஜான் பண்டிகை தொடங்கியுள்ளதால் பெங்களூருவில் இருந்து இருவரும் ஆம்பூருக்கு வந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக ஆம்பூரில் கோடை வெப்பம் அதிமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று சிறுவன் முகமது ஜக்கரியா தங்கள் வீட்டின் மேல் பகுதியில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் சீட்டின் மீது தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டின் மேலே சென்று கொண்டிருந்த மின்சாரக் கம்பி சிறுவன் மீது உரசியுள்ளது.

இதில், சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் திருப்பத்தூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!