பல்லாவரம் சந்தையில் கைவரிசை..! புஷ்பவனம் குப்புசாமியின் மொபைல் அபேஸ்..!

சென்னை:

சென்னை பல்லாவரம் சந்தையில் செடிகளை வாங்கச் சென்ற நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் செல்போன் திருபட்டப்பட் சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மிக முக்கிய நாட்டுப்புற பாடகர்களில் ஒருவர் புஷ்பவனம் குப்புசாமி. தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருதைப் பெற்றுள்ள இவர், பல சினிமா பாடல்களையும் பாடியுள்ளார். இவர் செடிகள் வாங்கச் சென்னை பல்லாவரம் சந்தைக்குச் சென்ற போது தான், இவரது செல்போன் திருடப்பட்டுள்ளது.

பல்லாவரம் சந்தை

சென்னை பல்லாவரத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை பல்லாவரம் சந்தை நடைபெறும். பல்லாவரம் சந்தையில் காய்கறிகள் மட்டுமின்றி எதையும் வாங்கிவிட முடியும் என்பதால் பல்லாவரம் சந்தை நடைபெறும் நாளில் சென்னையில் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கு வருவது வழக்கம். இதனால் அங்கு அவ்வப்போது திருட்டு சம்பவங்களும் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

7 செல்போன்கள்

இதைத் தடுக்க சந்தையில் பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள். இருப்பினும், இன்றைய தினம் தமிழக ஆளுநர் டெல்லியில் இருந்து சென்னை திரும்புவதால் போலீசார் பாதுகாப்புப் பணிக்காக விமான நிலையம் சென்றுவிட்டனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட திருடர்கள், இன்று ஒரே நாளில் மட்டும் பல்லாவரம் சந்தையில் 7 செல்போன்கள் திருடப்பட்டுள்ளது.

புஷ்பவனம் குப்புசாமி

இதில் பிரபல நாட்டுப்புற மற்றும் திரைப்பட பின்னணி பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் செல்போனையும் மர்ம நபர்கள் திருடி உள்ளனர். புஷ்பவனம் குப்புசாமியின் செல்போன் மதிப்பு ரூ.1 லட்சம் என்று கூறப்பட்டுள்ளது. செல்போனை இழந்த புஷ்பவனம் குப்புசாமி உள்ளிட்டோர் அளித்த புகாரின் பெயரில் பல்லாவரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் கோரிக்கை

பல்லாவரம் சந்தையில் அவ்வப்போது திருட்டு சம்பவங்கள் நடைபெறும் என்று கூறும் மக்கள் இதில் போலீசார் வழக்குப்பதிவு செய்வதில்லை என்றும் இதுவே திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறக் காரணம் என்றும் சாடியுள்ளனர். பல்லாவரம் சந்தையில் இதுபோன்ற தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Kaspersky Premium

Champions don't take risks, why should you?