கோவை:
கோவையில் மருந்து கடை நடத்துவது போல் நடித்து இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்து வந்த வாலிபரை போலீசர் பொறிவைத்து பிடித்துள்ளனர், கோவை கணபதி பகுதியை சேர்ந்த தனசேகர் மருந்து கடை ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்தும் கும்பலுடன் தொடர்பு ஏற்படுத்தியுள்ளார், கோவிட் காலத்தில் மதுக்கடை மூடல், கஞ்சாவுக்கு தட்டுப்பாடு உள்ளிட்ட காரணத்தால் போதை பிரியர்கள் மாத்திரைக்கு மாறியிருந்த நிலையில் அவர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திய தனசேகரன், தான் பணிபுரிந்து வந்த மருந்துக்கடையிலிருந்து யாருக்கும் தெரியாமல், மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளார். இந்த வியாபாரத்தில் பணம் அதிகம் கிடைப்பதை தெரிந்து கொண்ட தனசேகர், முழு நேரமும் போதை மாத்திரை விற்பனை செய்யலாம் என்று முடிவு செய்துள்ளார், இதை தொடர்ந்து கோவை கணபதியை அடுத்து கிருஷ்ணராயபுரம் பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சொந்தமாக மருந்துக்கடை ஒன்றை வைத்துள்ளார்.
அப்போது முதல் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் மாஃபியாவாக செயல்பட்டுள்ளார், தனசேகர், மருந்துக்கடை நடத்தும் அதே நேரத்தில் எங்கு யாருக்கு போதை மாத்திரை தேவைப்படுகிறதோ அவர்களுக்கு மாத்திரைகளை சப்ளை செய்து வந்துள்ளார் கல்லூரி மாணவர்கள் பலரும் அவரது மருந்துக்கடைக்கு வந்து ரகசியமாக போதை மாத்திரைகளை வாங்கிச் சென்றுள்ளனர். இந்த நிலையில் ரத்தினபுரி போலீசார் ரத்தினபுரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் முன்னதாக கைதான கஞ்சா வியாபாரிகள், போதை பொருள் பிரியர்களிடம் விசாரணை நடத்தியதில், போதை பொருள் மாஃபியாக்களுக்கு தனசேகரன் மாத்திதை தந்து வந்தது தெரியவந்தது, இதனை தொடர்ந்து போலீசார் தனசேகரை நோட்டமிட்டனர், இந்த நிலையில் நேற்று இரு சக்கர வாகனத்தில் மாத்திரைகளை எடுத்துக்கொண்டு சப்ளை செய்ய தயாரானதை தெரிந்துகொண்ட போலிஸார் தனசேகரனை பிந்தொடர்ந்தனர், காந்திபுரம், ஆம்னி பேருந்து நிலையம் அருகே தனசேகர் மாத்திரையை சப்ளை செய்ய முற்பட்ட பொழுது, காவல்துறையினர் கையும் களவுமாக தனசேகரை சேற்று பிடித்தனர்.
தனசேகரனிடமிருந்து அறுவை சிகிச்சைக்கு பின் வலி தெரியாமல் இருப்பதற்கும், நீண்ட நேர உறக்கத்திற்கும் தேவையான வலி நிவாரணி மற்றும் , தூக்க மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்ய வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, தனசேகரனிடமிருந்த 35 பெட்டிகளில் இருந்து 8 ஆயிரத்து 400 போதை மாத்திரிகளை ரத்தினபுரி போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தனசேகரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். குளுக்கோஸ் பாட்டில் தண்ணீருடன் போதை பிரியர்கள் வாலிபர்கள் ஊசி உள்ளிட்டவற்றை கோண்டு சென்று மாத்திரைகளை நுணுக்கி கைகளில் ஏற்றி பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதும் இந்த விசாரணையில் தெரிய வந்துள்ளதாக இரத்தினபுரி காவல் துறையினர் தெரவித்துள்ளனர்.