கார் மோதி வாலிபர் பலி: விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் தப்பியோட்டம்! Youth Dies in Maraimalai Nagar Car Accident

கார் மோதி வாலிபர் பலி: விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் தப்பியோட்டம்! Youth Dies in Maraimalai Nagar Car Accident

மறைமலைநகரில் கோர விபத்து; இளைஞரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு!

மறைமலைநகர் அருகே கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடினார்.

சிங்கபெருமாள் கோவில் அடுத்த கோகுலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லதாராம், 28. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, தனது இருசக்கர வாகனத்தில் ஜி.எஸ்.டி. சாலையில் வந்துகொண்டிருந்தார்.

அப்போது, சிங்கபெருமாள் கோவில் அடுத்த மெல்ரோசாபுரம் சந்திப்பில் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத ஒரு கார், லதாராமுடன் அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம்மீது மோதியது.

இந்த விபத்தில், லதாராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், லதாராமின் உடலைச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்துகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks