ரூ.500 கோடி வரை மோசடி: சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை நிர்வாகி மீண்டும் கைது! ₹500 Crore Scam: CBCID Police Arrests Savari Mutthu Arul Das Foundation Head

ரூ.500 கோடி வரை மோசடி: சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை நிர்வாகி மீண்டும் கைது!  ₹500 Crore Scam:  CBCID Police Arrests Savari Mutthu Arul Das Foundation Head
மீண்டும் அதே பாணியில் மோசடி; உடந்தையாக இருந்த நபர் வீட்டிலும் சி.பி.சி.ஐ.டி. சோதனை!


தமிழகம் முழுவதும் 500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாகக் கூறப்படும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அறக்கட்டளை நிர்வாகியை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் மீண்டும் கைது செய்து, அவரது வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையைச் சேர்ந்த ரவிச்சந்திரன், 50, என்பவர் நடத்திய சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை'**யில் பணம் செலுத்தினால், இரட்டிப்புப் பணம் தருவதாகவும், வெளிநாட்டிலிருந்து வரும் பல லட்சம் கோடி ரூபாயில் பங்கு தருவதாகவும் கூறி பொதுமக்களிடம் வசூல் செய்துள்ளார்.

இவ்வாறு ஐந்து ஆண்டுகளுக்கு முன், திருச்சி, புதுக்கோட்டை, ஈரோடு, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான ஏஜென்டுகளை நியமித்து, பல நூறு கோடி ரூபாய் வசூலித்து, பணத்தைத் திரும்பத் தராமல் மோசடி செய்துள்ளார்.

இந்த மோசடி தொடர்பாக, நான்கு ஆண்டுகளுக்கு முன் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்ட ரவிச்சந்திரன், சில மாதங்களில் ஜாமினில் வெளிவந்துள்ளார். இந்நிலையில், மீண்டும் அதே பாணியில் பொதுமக்களிடம் நிதி வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதையடுத்து, புதுக்கோட்டை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் வழக்குப்பதிவு செய்து, காரைக்குடியில் இருந்த ரவிச்சந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், குடுமியான்மலையில் உள்ள அவரது வீடு மற்றும் அறக்கட்டளை அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இதேபோல், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்து, ரவிச்சந்திரனுக்காகப் பலரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்துத் தந்த, திருச்சி, திருவானைக்காவலில் வசிக்கும் பாரதராஜா, 54, என்பவரது வீட்டிலும் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks