தென் இந்தியாவின் சக்தியைக் குறைக்க நடக்கும் மோசடி வேலை - மத்திய அரசு மீது த.வெ.க. தலைவர் குற்றச்சாட்டு!
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தின் மூலம் பா.ஜ.க. ஒரே நேரத்தில் தில்லுமுல்லு செய்ய நினைக்கின்றது என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அரியலூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்புப் பரப்புரையில் பேசிய விஜய், பீகாரில் 65 லட்ச வாக்காளர்கள் வாக்காளர் அட்டையிலேயே இல்லை; இது ஓட்டுத்திருட்டு நடந்துள்ளதைக் காட்டுகிறது என்று குற்றம் சாட்டினார்.
மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் வைத்து, ஒரே நேரத்தில் தில்லுமுல்லு செய்யப் பா.ஜ.க. நினைக்கின்றது. இது ஜனநாயக படுகொலை என்றும் அவர் விமர்சித்தார்.
தொகுதி மறுசீராய்வு என்ற பெயரில் வட இந்தியாவுக்கு மட்டும் அதிக தொகுதிகள் கிடைக்கும்படி மோசடி செய்கிறார்கள். தென் இந்தியாவின் சக்தியைக் குறைக்கச் செய்யப்படும் மோசடி வேலை இது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பா.ஜ.க. அரசு செய்யும் துரோகம் இது. தமிழக வெற்றிக் கழகம் இது அனைத்தையும் எதிர்க்கிறது என்று விஜய் தெரிவித்தார்.
