மக்கள் கடலோடு இருப்பதைக் கண்டு எதிரிகள் கண்ணாபின்னா எனப் பேசுகிறார்கள் - த.வெ.க. தலைவர் விஜய்!
வாழ்க வசவாளர்கள் எனச் சொல்லிச் சென்றுவிட வேண்டியதுதான் எனத் தன்னை விமர்சிப்பவர்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பதில் அளித்துள்ளார்.
அரியலூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்புப் பரப்புரையில் பேசிய விஜய், 'என்னடா இந்த விஜய் தனி ஆளாக இருப்பான் எனப் பார்த்தால், எப்போதும் மக்கள் கடலோடு இருக்கிறானே' என்று நம் எதிரிகளுக்குத் தெரிந்துவிட்டதால், அவர்கள் கண்னாபின்னா எனப் பேசுகிறார்கள் என்றார்.
மேலும், நான் மரியாதையாகப் பேசினால்கூட அதனைத் தவறாக எடுத்துக்கொள்கிறார்கள். யார் என்ன சொன்னாலும், அறிஞர் அண்ணா சொன்னதுபோல வாழ்க வசவாளர்கள்' எனச் சொல்லிச் சென்றுவிட வேண்டியதுதான்'' என்றும் அவர் தெரிவித்தார்.
'குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரியலூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்புப் பரப்புரையில் தெரிவித்தார்.
தனது முதல் அரசியல் பரப்புரையைத் திருச்சியில் தொடங்கி, தற்போது அரியலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விஜய், அங்கு தனது கட்சியின் லட்சியங்கள் குறித்துப் பேசினார்.
அப்போது அவர், உண்மையான மற்றும் மனசாட்சி உள்ள மக்களாட்சியே நம் லட்சியம். குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று நேரடியாக ஆளும் கட்சியை விமர்சித்தார்.
