அரசியலுக்கு வந்துதான் நான் பணம் சம்பாதிக்க வேண்டுமா என்ன? - த.வெ.க. தலைவர் உணர்ச்சிபூர்வ பேச்சு!
எனக்கு எல்லாத்தையும், எல்லாமும் கொடுத்த உங்களுக்காக உழைப்பதைவிட வேறு எந்த எண்ணமும், வேலையும் எனக்கு இல்லை'' என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உருக்கமாகப் பேசியுள்ளார்.
திருச்சியில் தனது முதல் மக்கள் சந்திப்புப் பரப்புரையைத் தொடங்கிய விஜய், தற்போது அரியலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது, அரசியல் குறித்துப் பேசிய அவர், உணர்ச்சிபூர்வமான கருத்துகளைத் தெரிவித்தார்.
என்னங்க பெரிய பணம்? போதும் என்ற அளவுக்குப் பார்த்தாச்சு. அரசியலுக்கு வந்துதான் நான் பணம் சம்பாதிக்க வேண்டுமா என்ன? அதற்குக் கொஞ்சம் கூட அவசியமில்லை என்று கூறிய விஜய், எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த உங்களுக்காக உழைப்பதைத் தவிர, வேறு எந்த எண்ணமும், வேலையும் எனக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.
விஜயின் இந்தப் பேச்சுத் தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் உணர்ச்சிபூர்வமான சூழலையும் ஏற்படுத்தியது.
