ஒன்றிய அரசுத் துரோகம் என்றால் நீங்கள் செய்வது நம்பிக்கை மோசடி; இரண்டுமே ஏமாற்றுவேலைதான்!
ஆளும் தி.மு.க. மற்றும் மத்தியிலுள்ள பா.ஜ.க. அரசுகள் இரண்டும் மக்களுக்குத் துரோகம் செய்வதாகவும், மறைமுக உறவுக்காரர்கள் போலச் செயல்படுவதாகவும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அரியலூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்புப் பரப்புரையில் பேசிய விஜய், செய்வோம், செய்வோம்' என சொன்னாங்களே... செய்தார்களா? என்று கேள்வி எழுப்பினார்.
பின்னர், ''My Dear CM Sir...'' ஒன்றிய அரசு செய்வது துரோகம் என்றால் நீங்கள் செய்வது நம்பிக்கை மோசடி. இரண்டுமே ஏமாற்றுவேலைதான், ஜனநாயகக் குற்றம்தான். ஏமாற்றுவதில் இருவருமே ஒரே வகையறாதான்'' என்று ஆளும் தி.மு.க.வையும் பா.ஜ.க.வையும் ஒரே நேரத்தில் தாக்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒன்றிய பிரதமர், இந்தியப் பிரதமர் என்று மாற்றி மாற்றி பேசுவதில் முதல்வர் வல்லவர். மறைமுக உறவுக்காரர்கள் என ஏன் சொல்கிறோம் என இப்போது புரிகிறதா? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
