போருக்கு முன் குலதெய்வ கோயிலுக்குச் செல்வதுபோல, அடுத்த வருடத் தேர்தலுக்கு முன் உங்களைப் பார்க்க வந்தேன்!
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 'ஜனநாயகப் போர்'க்கு முன், மக்களாகிய உங்களைப் பார்த்துச் செல்ல வந்திருக்கிறேன் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற தனது முதல் மக்கள் சந்திப்புப் பரப்புரையின்போது மைக் கோளாறு இருந்ததால், அங்குப் பேசிய ஒரு முக்கிய விஷயத்தை மீண்டும் சொல்ல விரும்புவதாக விஜய் தெரிவித்தார்.
அந்தக் காலத்தில் போருக்கு முன் குலதெய்வ கோயிலுக்குச் செல்வது வழக்கம். அப்படி அடுத்த வருடம் நடக்க உள்ள 'ஜனநாயக' போருக்கு முன், மக்களாகிய உங்களைப் பார்த்துச் செல்ல வந்திருக்கிறேன் என்று அவர் பேசினார்.
விஜயின் இந்த உரை, வருகின்ற தேர்தலை ஒரு போராக உருவகப்படுத்தியதுடன், மக்கள் மீதான தனது நம்பிக்கையையும் ஆழமாக வெளிப்படுத்தியது.
