சகா கொலை செய்யப்பட்ட நிலையில் கருத்து வெளியிட்ட அதிகாரி!
சக காவலர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, வாட்ஸ்அப் குழுவில் காவல்துறையை விமர்சித்துப் பதிவு செய்த சைபர் கிரைம் எஸ்.எஸ்.ஐ. ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், குடிமங்கலத்தில் நள்ளிரவு ரோந்துப் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.) சண்முகவேல், குடும்பத் தகராறு தொடர்பாக விசாரணைக்குச் சென்றபோது படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், திருப்பூர் மாநகர சைபர் கிரைம் பிரிவு ஆய்வகத்தின் எஸ்.எஸ்.ஐ., முருகன், காவல்துறையின் செயல்பாடுகளை விமர்சித்து வாட்ஸ்அப் குழுவில் கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து, உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட திருப்பூர் தெற்கு போலீஸ் துணை கமிஷனர் தீபா சத்யன், எஸ்.எஸ்.ஐ. முருகனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
