போதைப் பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது தி.மு.க. அரசு என்றும் குற்றச்சாட்டு!
திமுக ஆட்சியில் கோவைக்குப் பெரிய திட்டம் எதுவும் வரவில்லை என்றும், போதைப் பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகவும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் கோவைக்குப் பெரிய திட்டம் எதுவும் வரவில்லை. மக்கள், தொழில் துறையினரைப் பற்றிக் கவலை இல்லாத அரசாகத் திமுக உள்ளது" என்று கூறினார்.
மேலும், போதைப் பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த திமுக அரசு தவறி விட்டது. அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மின்கட்டண உயர்வு குறித்துப் பேசிய அவர், மின்கட்டண உயர்வைக் கேட்டாலே ஷாக் அடிக்கிறது. இதனால், தொழில் துறையினர் மிகவும் வேதனை தெரிவிக்கின்றனர் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
