ரயில்வே போலீசார் அதிரடி: கேரளாவிற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்! Railway police foil attempt to smuggle ration rice to Kerala

ரயில்வே போலீசார் அதிரடி: கேரளாவிற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்!  Railway police foil attempt to smuggle ration rice to Kerala

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நடந்த அதிரடி சோதனையில் அதிர்ச்சி!

குமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கேரளாவிற்கு ரயிலில் கடத்த முயன்ற 160 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை ரயில்வே போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து கொல்லம் நோக்கிச் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில், நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு வந்தபோது, ரயில்வே போலீசார் சந்தேகத்தின் பேரில் ரயிலில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, முன்பதிவு செய்யப்படாத பெட்டியின் இருக்கையின் கீழ் மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர். அவற்றை எடுத்துப் பார்த்தபோது, சுமார் 160 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.

குறைந்த விலையில் தமிழகத்தில் பெறப்படும் ரேஷன் அரிசியை, அதிக விலைக்குக் கேரளாவிற்கு சட்டவிரோதமாகக் கடத்தும் முயற்சி இது எனப் போலீசார் தெரிவித்தனர். மூட்டைகளை அங்கேயே விட்டுவிட்டு கடத்தல்காரர்கள் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரேஷன் அரிசியைக் கடத்த முயன்றவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks