பள்ளிகொண்டா அருகே மணல் கடத்தல்: மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 3 பேர் கைது! 3 arrested for sand smuggling near Pallikonda

பள்ளிகொண்டா அருகே மணல் கடத்தல்: மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 3 பேர் கைது! 3 arrested for sand smuggling near Pallikonda

போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பயந்து மாட்டு வண்டிகளை விட்டுச்சென்ற கடத்தல்காரர்கள்!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே, மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரைக் கண்டதும் வண்டிகளை விட்டுவிட்டு தப்பியோடியவர்களை, மாடுகளை மீட்க வந்தபோது போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று அதிகாலை 3 மணியளவில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் ஏட்டு மணி ஆகியோர் பள்ளிகொண்டா வடகாத்திபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக மூன்று மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த நபர்களைப் பிடிக்க முயன்றனர். போலீசாரைக் கண்டதும் மணல் கடத்தல்காரர்கள் மாட்டு வண்டிகளை அங்கேயே நிறுத்திவிட்டு இருளில் தப்பியோடினர். போலீசார் அந்த மாட்டு வண்டிகளைப் பறிமுதல் செய்து, பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளை மீட்க, மாட்டு வண்டிகளின் உரிமையாளர்கள் காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்போது, போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சீத்தாபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (41), ஜெயமுருகன் என்ற தனசேகரன் (35), மற்றும் எம்.என்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (39) ஆகியோர் மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, சட்டவிரோதமாக மணல் கடத்தியதாக அவர்கள் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks