ஆட்டோவில் 1243 மதுபாட்டில்கள் கடத்தல்... போலீசார் அதிரடி வேட்டை! 1243 Liquor Bottles Seized from Auto in Thanjavur

ஆட்டோவில் 1243 மதுபாட்டில்கள் கடத்தல்... போலீசார் அதிரடி வேட்டை! 1243 Liquor Bottles Seized from Auto in Thanjavur

புதுக்கோட்டையில் திருடப்பட்ட மதுபானங்கள்... தஞ்சை அருகே சிக்கியது எப்படி?

தஞ்சாவூர் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் தப்பியோடிய ஒரு ஆட்டோவை விரட்டிப் பிடித்த போலீசார், அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1243 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்துள்ளனர். இந்த மதுபாட்டில்கள் புதுக்கோட்டையில் உள்ள அரசு மதுபானக் கடையிலிருந்து திருடப்பட்டவை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 13-ஆம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், தஞ்சாவூர் அருகே ஒரு ஆட்டோவைத் தடுத்து நிறுத்திச் சோதனையிட முயன்றனர். ஆனால், போலீசாரைக் கண்டதும் அந்த ஆட்டோ நிற்காமல் மின்னல் வேகத்தில் தப்பியோடியது. இதனால் சந்தேகம் வலுக்கவே, போலீசார் ஆட்டோவைத் தீவிரமாக விரட்டிச் சென்றனர். ஒரு கட்டத்தில், ஆட்டோவை ஓட்டிவந்தவர்கள் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு இருளில் தப்பியோடினர்.

பின்னர், போலீசார் அந்த ஆட்டோவைச் சோதனையிட்டபோது, ஆட்டோ முழுக்க மூட்டைகளில் அடைக்கப்பட்டிருந்த 1243 மதுபாட்டில்கள் மற்றும் 2 இரும்பு கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மதுபாட்டில்கள் எங்கிருந்து கடத்தப்பட்டன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் கோவிலூர் பகுதியில் உள்ள ஒரு அரசு மதுபானக் கடையில், காவலாளியைத் தாக்கிவிட்டு இந்த மதுபாட்டில்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, இந்த வழக்கைக் கந்தர்வகோட்டை போலீசாருக்கு மாற்றி, தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks