ரீல்ஸ் வேற, ரியாலிட்டி வேற என்று சொல்லிக்கொண்டே முதல்வர் வெற்று நாடகங்களை நடத்துகிறார் - த.வெ.க. தலைவர் விமர்சனம்!
முதல்வர் மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகள் உண்மைக்குப் புறம்பானவையென, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அரியலூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்புப் பரப்புரையின்போது பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ரீல்ஸ் வேற ரியாலிட்டி வேறன்னு சொல்லிட்டு, நீங்க விடுற அம்புட்டும் ரீல்ஸ் தான்; அதுல பாதி அறுந்து போச்சு முதலமைச்சர் அய்யா என்று நேரடியாக முதல்வர் மீது குற்றம் சாட்டினார்.
அதாவது, அரசுத் திட்டங்கள் அனைத்தும் ஊடகங்களில் விளம்பரப்படுத்துவதற்காகவே செயல்படுத்தப்படுவதாகவும், அவை மக்களுக்குத் தேவையான பலன்களை அளிக்காமல் தோல்வியடைந்துவிட்டதாகவும் விஜய் விமர்சித்துள்ளார்.
My Dear CM Sir எனக் கூறியதற்கு முன், 'வேண்டாம் வேண்டாம், அவர்களுக்கு ஆசையாகவும் பாசமாகவும் அழைத்தால் பிடிக்கவில்லை' என மதுரை மாநாட்டில் 'CM Uncle' என நான் கூறியது சர்ச்சையானதை சூசகமாக விமர்சித்து, 505 தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளைத் திமுக அரசு நிறைவேற்றியது?' என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், முக்கால்வாசி கூட நிறைவேற்றாமல், எல்லாவற்றையும் நிறைவேற்றிவிட்டோம் எனக் கதை விடுகிறீர்களே My Dear CM Sir?'' என்றும் கேள்வி எழுப்பினார்.
ரீல்ஸ் வேறு, ரியாலிட்டி வேறு எனச் சொல்லிவிட்டு, இன்று நீங்கள் விடுவதெல்லாம் ரீல்ஸ் தான். அதில் பாதி அறுந்தும் போய்விட்டது என்றும் அவர் தொடர்ந்து விமர்சித்தார்.
அரசியலில் தனது முதல் பரப்புரையைத் தொடங்கிய விஜய், ஆளும் கட்சியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
