அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கிடுக்கிப்பிடி: ஆல்கஹால் மற்றும் பயோமெட்ரிக் சோதனை! Government Bus Drivers Face Alcohol Tests in Tiruvallur

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கிடுக்கிப்பிடி: ஆல்கஹால் மற்றும் பயோமெட்ரிக் சோதனை! Government Bus Drivers Face Alcohol Tests in Tiruvallur

பயணிகள் பாதுகாப்புக்காக அனைத்து பணிமனைகளிலும் புதிய நடைமுறை அமல்!

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பணிக்கு வரும்போது மது போதையில் உள்ளனரா என்பதைக் கண்டறிய, தினமும் 'ஆல்கஹால்' பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், ஊழியர்களின் வருகையைப் பதிவு செய்ய விரல்ரேகை வருகைப் பதிவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மது அருந்திவிட்டுப் பணிக்கு வந்ததால்

அரசுப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் சிலர் மது அருந்திவிட்டுப் பணிக்கு வருவதாகப் பயணிகள் தரப்பிலிருந்து போக்குவரத்துத் துறைக்குப் பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து, தமிழகம் முழுவதும் அனைத்துப் போக்குவரத்துப் பணிமனைகளிலும், பணிக்கு வரும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் மது போதையில் உள்ளனரா என்பதை 'ஆல்கஹால்' பரிசோதனைக் கருவிமூலம் சோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து போக்குவரத்துப் பணிமனைகளிலும் இந்தச் சோதனை தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருவள்ளூர் மண்டல அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலர் கூறியதாவது:

திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கோயம்பேடு ஆகிய ஐந்து பணிமனைகளிலும், தினமும் பணிக்கு வரும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களிடம் சோதனை செய்யப்படுகிறது. மது அருந்தியது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் திடீர் சோதனை, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, விபத்துகளையும் முற்றிலும் தவிர்க்கும். இருப்பினும், இதுவரை திருவள்ளூர் மண்டலத்தில் யாரும் மது அருந்திவிட்டுப் பணிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது'' என்று அவர் தெரிவித்தார்.

விரல் ரேகை வருகை பதிவு

திருவள்ளூர் மண்டலத்தில் பணிபுரியும் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பிற ஊழியர்கள், பணிக்கு வரும்போதும், முடித்துச் செல்லும்போதும், இதுவரை வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு வந்தனர். இந்த முறையில், சிலர் பணியில் இல்லாமல் வெளியே சென்றுவிடுவதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, இந்த முறையை மாற்றி, விரல்ரேகை வருகைப் பதிவேடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனி, ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வரும்போதும், முடிந்து செல்லும்போதும் தங்கள் விரல்ரேகையைப் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் ஊழியர்களின் வருகை உறுதி செய்யப்பட்டு, அதற்கேற்ப சம்பளம் வழங்கப்படும்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks