சிவகங்கையில் ஓடும் சிற்றாறுகள், வரத்துக் கால்வாய்களைத் தூர்வாரக் கோரிக்கை! Farmers Request Desilting of Rivers in Sivaganga

சிவகங்கையில் ஓடும் சிற்றாறுகள், வரத்துக் கால்வாய்களைத் தூர்வாரக் கோரிக்கை! Farmers Request Desilting of Rivers in Sivaganga

சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு; மணல் திருட்டால் பெரிய பள்ளங்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் ஓடும் சிற்றாறுகள், வரத்துக் கால்வாய்கள் முறையாகப் பராமரிக்கப்படாததால், விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், அவற்றை உடனடியாகத் தூர்வார வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் வைகை, பாம்பாறு, பாலாறு, தேனாறு, நாட்டாறு, உப்பாறு, சருகனியாறு, கிருதுமால், மணிமுத்தாறு, விருசுழியாறு என 10 சிற்றாறுகள் உள்ளன. இதில், தற்போது வைகை ஆறு மட்டுமே உயிர்ப்புடன் இருந்து வருகிறது. இந்த ஆறுகளின் நீர், பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 968 கண்மாய்கள், 4 ஆயிரத்து 871 ஒன்றியக் கண்மாய்கள் வழியாகப் பாய்ந்து 2 லட்சத்து 83 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்குப் பாசன வசதியை அளிக்கின்றன.

ஆனால், இந்த ஆறுகளையும் வரத்துக் கால்வாய்களையும் முறையாகப் பராமரிக்காததால், அவற்றில் சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. மேலும், பல இடங்களில் மணல் திருட்டு நடைபெற்று பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த ஆறுகள் மற்றும் கால்வாய்களை முறையாகத் தூர்வாரி, சீமைக்கருவேல மரங்களை அகற்றினால் மட்டுமே விவசாயத்தைப் பிரதான தொழிலாக மாற்ற முடியும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். எனவே, அரசு இந்த விவகாரத்தில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் எனப் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks