சென்னையில் தொழிலதிபர் அரவிந்த் வீட்டில் மருந்து ஏற்றுமதி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா காலத்தில் மருந்து ஏற்றுமதியில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், சென்னை புரசைவாக்கம், ஃபிளவர்ஸ் சாலையில் வசித்து வரும் தொழிலதிபர் அரவிந்த் என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை (Enforcement Directorate - ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அரவிந்த், பல ஆண்டுகளாக மும்பையில் மருந்துத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்ததாகவும், பின்னர் அந்த நிறுவனத்தைத் தமிழகத்திற்கு மாற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அவர் உத்தரப்பிரதேசத்தில் மருந்துத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தபோது, கொரோனா காலத்தில் மருந்து ஏற்றுமதியில் முறைகேடுகள் நடந்ததைக் கண்டுபிடித்த அதிகாரிகள், அதைத் தொடர்ந்து தமிழகத்திற்கு நிறுவனம் மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த முறைகேடு தொடர்பான வழக்கின் தொடர்ச்சியாகவே, தென் மண்டல அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இவரது ஆடிட்டர், சமீபத்தில் தி.நகரில் உயிரிழந்த விஜயராகவன் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
in
தமிழகம்