Rain Update: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



காற்றழுத்த தாழ்வுப் பகுதி:

வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (செப். 2) ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டாலும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைக்கான வாய்ப்பு:

  • இன்று மற்றும் நாளை: வட தமிழகத்தின் சில பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

  • செப். 4 முதல் 7 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை:

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸாகவும் இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

நாளை முதல் வரும் 5-ஆம் தேதி வரை, தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!