₹40,000 அபராதம்... டிரைவர் ஆவேசம்: போலீஸ் இன்ஸ்பெக்டர் மண்டையை உடைத்த கொடூரம்! Drunken rage: Truck driver smashes inspector's head in Chennai

₹40,000 அபராதம்... டிரைவர் ஆவேசம்: போலீஸ் இன்ஸ்பெக்டர் மண்டையை உடைத்த கொடூரம்! Drunken rage: Truck driver smashes inspector's head in Chennai

₹40,000 அபராதம்... டிரைவர் ஆவேசம்: போலீஸ் இன்ஸ்பெக்டர் மண்டையை உடைத்த கொடூரம்!

நசரத்பேட்டையில் நடந்த பரபரப்பு சம்பவம்... 5 கி.மீ. துரத்தி லாரி டிரைவரை மடக்கிப் பிடித்த போலீஸ்!


சென்னை: ₹40,000 அபராதம் விதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர், போக்குவரத்துக் காவல் இன்ஸ்பெக்டரை இரும்பு கம்பியால் தாக்கி மண்டையை உடைத்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு தப்பியோட முயன்ற டிரைவரை, போலீசார் 5 கி.மீ. தூரம் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்துள்ளனர்.

சென்னை துறைமுகத்தில் இருந்து மும்பைக்கு கன்டெய்னர் லாரி ஓட்டிச் சென்ற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முகமது அலி, பூந்தமல்லி நசரத்பேட்டை சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டபோது, அங்கிருந்த ஒப்பந்த ஊழியர்கள் பணம் கேட்டுள்ளனர். அதற்கு மறுத்து வேகமாக வண்டியை ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள், வண்டி எண்ணை குறித்துக்கொண்டு, போக்குவரத்து விதியை மீறியதாக ₹40,000 அபராதம் விதித்து உரிமையாளருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அபராதத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த லாரி உரிமையாளர், உடனடியாக முகமது அலிக்கு போன் செய்து சத்தம் போட்டுள்ளார். பணத்தைக் கொடுத்து அபராதத்தை ரத்து செய்யும்படி உரிமையாளர் வற்புறுத்தியதால், மன உளைச்சலுக்கு ஆளான முகமது அலி, லாரியை மீண்டும் நசரத்பேட்டை சோதனைச்சாவடிக்குத் திருப்பிக் கொண்டு வந்தார். அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சந்திரன் (58) அவரிடம், "ஏன் வண்டியை நிறுத்தாமல் சென்றாய்?" எனக் கேட்டுள்ளார். அதற்கு முகமது அலி, "அதற்காக ₹40,000 அபராதமா?" என்று வாக்குவாதம் செய்துள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், லாரி உரிமையாளர் மற்றும் போலீசாரின் நெருக்கடியால் வெறுத்துப் போன முகமது அலி, லாரியில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து இன்ஸ்பெக்டர் சந்திரனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. வலியால் இன்ஸ்பெக்டர் அலறிய சத்தம் கேட்டு ஓடி வந்த போலீசார் மற்றும் ஊழியர்களைக் கண்டதும், முகமது அலி லாரியை ஸ்டார்ட் செய்து தடுப்புகள் மீது மோதிவிட்டு வேகமாகத் தப்பியோடியுள்ளார்.

தகவல் அறிந்த போலீசார், ரோந்து வாகனங்களில் சுமார் 5 கி.மீ. தூரம் விரட்டிச் சென்று, திருமழிசையில் லாரியை மடக்கிப் பிடித்து முகமது அலியை கைது செய்தனர். பரிசோதனையில் அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. படுகாயமடைந்த இன்ஸ்பெக்டர் சந்திரன் பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். போதையில் லாரி டிரைவர் போலீஸ் இன்ஸ்பெக்டரைத் தாக்கிய சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks