ரஷ்ய எண்ணெய் ஒருபுறம்... அமெரிக்கச் சோளம் மறுபுறம்: இந்தியாவுக்குச் சந்தை கிடைக்காது- அமெரிக்காவின் புதிய வர்த்தக மிரட்டல்! America Warns India on Corn Imports

ரஷ்ய எண்ணெய் ஒருபுறம்... அமெரிக்கச் சோளம் மறுபுறம்: இந்தியாவுக்குச் சந்தை கிடைக்காது- அமெரிக்காவின் புதிய வர்த்தக மிரட்டல்! America Warns India on Corn Imports

மரபணு மாற்றப்பட்ட சோளம் வாங்க மறுக்கும் இந்தியா; கடுமையாகச் சாடிவரும் அமெரிக்க வர்த்தக செயலாளர்; வர்த்தகப் பேச்சுவார்த்தையில் புதிய நெருக்கடி!

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ததற்காக ஏற்கெனவே வர்த்தகத் தடைகளை எதிர்கொண்டு வரும் இந்தியாவுக்கு, அமெரிக்கா தற்போது புதிய வர்த்தக நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கச் சோளத்தை வாங்க மறுத்தால், அமெரிக்கச் சந்தையில் நுழையும் உரிமையை இந்தியா இழக்கும் என அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹாவர்ட் லட்னிக் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒருபுறம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் அமெரிக்க வர்த்தகச் செயலாளர் லட்னிக்கின் இந்த அதிரடிப் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அண்மையில் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், இந்தியாவுக்கு 1.4 பில்லியன் மக்கள் உள்ளனர் எனப் பெருமை பேசுகிறார்கள். ஆனால், எங்களது ஒரு புஷல் சோளத்தைக்கூட ஏன் அவர்கள் வாங்குவதில்லை? எங்களது சந்தையை அவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள், ஆனால் எங்களுக்கு அவர்களின் சந்தையில் இடமளிக்க மறுக்கிறார்கள்" என்று காட்டமாகச் சாடினார்.

ஆனால், இந்த விவகாரத்தில் உள்விவகாரமாக ஒரு காரணம் உள்ளது. அமெரிக்காவில் விளையும் சோளம் பெரும்பாலும் மரபணு மாற்றப்பட்ட சோளம் ஆகும். இந்தியாவைப் பொறுத்தவரை, உணவுப் பாதுகாப்புக் காரணங்களுக்காக மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மலிவான விலையில் கிடைத்தாலும்கூட, அமெரிக்கச் சோளத்தை இறக்குமதி செய்ய இந்தியாவிற்குச் சட்டப்பூர்வமாக அனுமதி இல்லை.

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைச் சாடி ஏற்கெனவே இந்தியா மீது 25% வரி விதித்துள்ள அமெரிக்கா, தற்போது சோளம் கொள்முதல் செய்ய மறுப்பதையும் வர்த்தகத் தடையாகப் பார்க்கிறது. இது இரு நாடுகளின் வர்த்தக உறவில் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இந்தத் திடீர் அழுத்தத்திற்குப் பின்னால் ஒரு அரசியல் காரணமும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க-சீன வர்த்தகப் போரின் காரணமாக அமெரிக்க விவசாயிகளுக்குக் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் விவசாயிகளின் ஆதரவைப் பெற, டொனால்டு டிரம்ப் நிர்வாகம் அமெரிக்கச் சோளத்திற்குப் புதிய சந்தையை இந்தியாவில் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks