புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் ரோபாட்டிக்ஸ் துறை: மாணவர்களுக்காக அறிமுகமாகியுள்ள அசத்தல் இலவச படிப்புகள்! Free Robotics Courses for Students

புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் ரோபாட்டிக்ஸ் துறை: மாணவர்களுக்காக அறிமுகமாகியுள்ள அசத்தல் இலவச படிப்புகள்!  Free Robotics Courses for Students

அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகங்கள் முதல் இந்தியாவின் சுயம் தளம் வரை... தொழில்நுட்பப் புரட்சிக்குத் தயாராகும் மாணவர்கள்!

செயற்கை நுண்ணறிவுடன் இணைந்து மனிதர்களின் வேலைகளைச் செய்யும் ரோபோட்டிக்ஸ் துறை தற்போது தொழில்நுட்ப உலகில் ஒரு புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துறையில் தடம் பதிக்க விரும்பும் மாணவர்களுக்காக, உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் பல இலவச ஆன்லைன் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன. நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ரோபோட்டிக்ஸ் ஒரு முக்கியப் புலம் என அரசு தரப்பிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி அரசு இதற்கென ரூ.170 கோடி நிதி ஒதுக்கி, 15 தொழிற்பயிற்சி நிறுவனங்களை (ITIs) மேம்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

உலகெங்கிலும் உள்ள முன்னோடி நிறுவனங்களான மிச்சிகன் பல்கலைக்கழகம் (University of Michigan), மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT), மற்றும் இந்தியாவின் சுயம் (Swayam) போன்ற தளங்கள் இலவச ரோபோட்டிக்ஸ் படிப்புகளை வழங்குகின்றன. மிச்சிகன் பல்கலைக்கழகம், தங்கள் படிப்புகளுக்கான பாடத்திட்டங்கள், வீடியோக்கள் மற்றும் குறிப்புகளை கிட்ஹப் (GitHub) மற்றும் யூடியூப் (YouTube) போன்ற தளங்களில் இலவசமாகப் பகிர்ந்துள்ளது. அதேபோல், எம்ஐடி-யின் திறந்தநிலை பாடத்திட்டத் தளத்தில் (OpenCourseWare), 25-க்கும் மேற்பட்ட விரிவுரைகள், வீட்டுப்பாடங்கள் மற்றும் திட்டப்பணிகளுடன் கூடிய விரிவான படிப்பு வழங்கப்படுகிறது.

இந்திய அரசின் சுயம் தளத்தில் கிடைக்கும் எட்டு வார ரோபோட்டிக்ஸ் பாடத்திட்டம், ரோபோக்களின் வரலாறு, அதன் பாகங்கள், இயக்கம் மற்றும் உணர்விகள் குறித்து எளிமையாக எடுத்துரைக்கிறது. பொறியியல் மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதுபோல, பல்வேறு உலகளாவிய கல்வி நிறுவனங்கள், ரோபோட்டிக்ஸ் துறையின் கணிதம், இயக்கம் மற்றும் புரோகிராமிங் அடிப்படைகளைச் சொல்லித்தரும் படிப்புகளை இலவசமாக வழங்குகின்றன. இந்தப் படிப்புகள், மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவுவதுடன், இந்தியாவின் தொழில்நுட்பச் சாதனைப் பயணத்திலும் ஒரு அங்கமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks