ரூ.2 லட்சம் கோடியில் புதிய வான்காவலர்கள்! - 114 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க மத்திய அரசுக்கு இந்திய விமானப்படை திட்டம்! Indian Air Force new plan 2 lakh crore defense deal

ரூ.2 லட்சம் கோடியில் புதிய வான்காவலர்கள்! - 114 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க மத்திய அரசுக்கு இந்திய விமானப்படை திட்டம்!  Indian Air Force new plan 2 lakh crore defense deal

தன்னிறைவு நோக்கிய பயணத்தில் முக்கிய நகர்வு: உள்நாட்டிலேயே ரஃபேல் விமானங்கள் தயாரிக்கத் திட்டம்!


இந்திய விமானப்படையின் வலிமையை மேலும் அதிகரிக்கும் வகையில், சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான 114 புதிய ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. 

இந்த அதிரடித் திட்டம், நாட்டின் முப்படைகளுக்கும் புதிய பலம் சேர்க்கும் முக்கிநகர்வாகப் பார்க்கப்படுகிறதுது. ஏற்கனவே பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் விமானங்கள் வாங்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதல் விமானங்களை வாங்குவதற்கான கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், புதிய ரஃபேல் விமானங்கள் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இணைந்து இந்திய நிறுவனங்களே உள்நாட்டில் முழு வீச்சில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளன.

 இது இந்தியாவின் 'தன்னிறைவு இந்தியா' மற்றும் 'பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு' ஆகிய கொள்கைகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த மெகா திட்டத்தின் மூலம், பாதுகாப்புத் துறையில் இந்தியா ஒரு புதிய மைல்கல்லை எட்டும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks