அரியலூர் கந்துவட்டி கொடுமை: ஆசிரியை தற்கொலை; 5 பேர் மீது குற்றச்சாட்டு! Teacher Commits Suicide Over Usury in Ariyalur

அரியலூர் கந்துவட்டி கொடுமை: ஆசிரியை தற்கொலை; 5 பேர் மீது குற்றச்சாட்டு!  Teacher Commits Suicide Over Usury in Ariyalur

செல்போனில் வீடியோ பதிவு செய்துவிட்டு உயிரை மாய்த்த சத்யா!

அரியலூரில் கந்துவட்டி கொடுமை காரணமாக அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், மேல குடியிருப்பைச் சேர்ந்த சத்யா, 38, என்பவர் அரசு பள்ளியில் கணினி பயிற்சி ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற அவரை, தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தற்கொலைக்கு முன், சத்யா தனது செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், கலைவாணி, கவுசல்யா, கவிதா, அவரது தாய் மற்றும் அம்பிகா ஆகியோரிடம் வாங்கிய கடனுக்கு, அசல் தொகைக்கு மேல் வட்டி கொடுத்துள்ளேன். ஆனாலும், அவர்கள் மீண்டும் பணம் கேட்டு டார்ச்சர் செய்ததால், தற்கொலை செய்து கொள்கிறேன்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

சத்யாவின் மரணம்குறித்து ஜெயங்கொண்டம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அவர் செல்போனில் பதிவு செய்த வீடியோவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks