அடுத்த 168 மணிநேரத்திற்கு புயல் உருவாக வாய்ப்பில்லை - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை! IMD Predicts No Cyclone for Next 168 Hours

அடுத்த 168 மணிநேரத்திற்கு புயல் உருவாக வாய்ப்பில்லை - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை! IMD Predicts No Cyclone for Next 168 Hours

வங்கக் கடலில் புதிய மேலடுக்கு சுழற்சி; அரபிக் கடலில் புயல் சின்னம் எதுவும் இல்லை!

அடுத்த 168 மணிநேரத்திற்கு (7 நாட்கள்) வட இந்தியப் பெருங்கடலில் (வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல்) எந்தப் புயலும் உருவாக வாய்ப்பில்லையென இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, புயல் சார்ந்த தகவல்களை வழங்கும் புதுடெல்லி பிராந்திய சிறப்பு வானிலை மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வங்காள விரிகுடா:

வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது வடக்கு தெலங்கானா மற்றும் விதர்பா பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் இன்று (செப். 14) புதிய மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. எனினும், அடுத்த 168 மணிநேரத்திற்கு இங்குப் புயல் உருவாவதற்கான வாய்ப்பு எதுவும் இல்லை.

அரபிக் கடல்:

தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய அரபிக் கடலில் மிதமானது முதல் தீவிரமான மேகக்கூட்டங்கள் காணப்படுகின்றன. எனினும், அடுத்த 168 மணிநேரத்திற்கு இங்குப் புயல் உருவாவதற்கான வாய்ப்பு எதுவும் இல்லை.


---

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks