ஓய்வுபெற்ற டாக்டரிடம் ரூ.4.43 கோடி மோசடி: போலி ஆன்லைன் வர்த்தகத்தில் சிக்கிய நபர் கைது!Retired Doctor Cheated of ₹4.43 Crore in Kerala

ஓய்வுபெற்ற டாக்டரிடம் ரூ.4.43 கோடி மோசடி: போலி ஆன்லைன் வர்த்தகத்தில் சிக்கிய நபர் கைது!Retired Doctor Cheated of ₹4.43 Crore in Kerala
தமிழகத்தைச் சேர்ந்தவரின் வங்கிக் கணக்கை முறைகேடாகப் பயன்படுத்தியது அம்பலம்!

கேரளாவில், ஓய்வுபெற்ற அரசு டாக்டர் ஒருவரிடம் ஆன்லைன் வர்த்தகத் திட்டம் மூலம் ரூ.4.43 கோடி மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரளாவின் கண்ணுார் மாவட்டத்தில் உள்ள 70 வயதான ஓய்வுபெற்ற அரசு டாக்டர் ஒருவருக்கு, எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜைனுல் அபிதீன், 41, என்பவர் வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், 'அப்ஸ்டாக்ஸ்' என்ற வர்த்தகத் தளத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதை நம்பி, அந்த டாக்டர் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ரூ.4.43 கோடி முதலீடு செய்துள்ளார். பணத்தைத் திரும்ப எடுக்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த டாக்டர், கண்ணுார் மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார்.

விசாரணையில், இந்த மோசடியை அரக்கப்பாடி பகுதியைச் சேர்ந்த ஜைனுல் அபிதீன் செய்தது தெரியவந்தது. உடனடியாக அவரைப் போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில், இந்த மோசடிக்காக, தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவரது வங்கிக் கணக்கை அவருக்குத் தெரியாமலேயே ஜைனுல் அபிதீன் முறைகேடாகப் பயன்படுத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக, போலீஸார் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks