ஆம்னி பஸ் பர்மிட் வாங்க ஆந்திரா, கேரளாவில் 3 நாள்; தமிழகத்தில் ஆறு மாதமா? தனியார் பஸ் உரிமையாளர்கள் புகார்! Private Bus Owners Complain About Permit Delays

ஆம்னி பஸ் பர்மிட் வாங்க ஆந்திரா, கேரளாவில் 3 நாள்; தமிழகத்தில் ஆறு மாதமா? தனியார் பஸ் உரிமையாளர்கள் புகார்!  Private Bus Owners Complain About Permit Delays

பழைய நடைமுறையால் தாமதம்; உரிமையாளர் பெயர் மாற்ற ஆறு மாதங்கள் ஆகிறது எனத் தனியார் பஸ் உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், தங்கள் வாகனங்களுக்கான பதிவு, அனுமதிச் சீட்டு (பர்மிட்) புதுப்பிப்பு மற்றும் உரிமையாளர் பெயர் மாற்றம் போன்ற சேவைகளைப் பெற தமிழகத்தில் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளதாகப் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னையிலிருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை தவிர மாவட்டங்களில் சுமார் 4,700 தனியார் பேருந்துகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இந்தப் பேருந்துகளுக்கான பதிவுகள் மற்றும் பிற அடிப்படைச் சேவைகளைத் தமிழக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் தாமதப்படுத்துவதாக உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

புதிதாக ஒரு பேருந்தைப் பதிவு செய்ய வேண்டும் என்றால், இரண்டு மாதங்கள் வரை ஆகிறது. அதேபோல, அனுமதிச் சீட்டைப் புதுப்பிப்பதற்கும், உரிமையாளர் பெயர் மாற்றத்துக்கும் ஆறு மாதங்கள் வரை தாமதம் ஏற்படுகிறது'' என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

 ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில், ஆதார் அட்டையுடன் கூடிய பயோமெட்ரிக் முறையை அமல்படுத்தி, இது போன்ற சேவைகளை அதிகபட்சம் மூன்று நாட்களில் வழங்கி விடுகின்றனர். தமிழகத்திலும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, சேவைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks