வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு கால நிர்ணயம் செய்வது வரம்புமீறல் - உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் பதில்! ECI Responds in Supreme Court on Voter List Revision

வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு கால நிர்ணயம் செய்வது வரம்புமீறல் - உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் பதில்! ECI Responds in Supreme Court on Voter List Revision
தேர்தல் கமிஷனுக்கு முழு அதிகாரம் உள்ளது; பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

வாக்காளர் பட்டியலில் வழக்கமான இடைவெளியில் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதற்கான கால நிர்ணயம், தேர்தல் கமிஷனின் பிரத்யேக அதிகார வரம்பை மீறுவதாகும் என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் பதிலளித்துள்ளது.

பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டபோது, தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறிப்பிட்ட இடைவெளியில் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை நடத்த தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்குப் பதிலளித்து, தேர்தல் கமிஷன் தாக்கல் செய்த மனுவில், 'வாக்காளர் பட்டியலைத் திருத்துவது என்பது தேர்தல் கமிஷனின் விருப்பத்துக்கு உட்பட்டது. இதில் உச்ச நீதிமன்றம் உட்பட எந்த அமைப்பும் தலையிட முடியாது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் - 1950 மற்றும் தேர்தல் பதிவு விதிகள் - 1960 ஆகியவற்றின்படி, இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷனுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளது.

வரும் 2026 ஜனவரி 1-ஐ அடிப்படையாகக் கொண்டு, நாடு முழுதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணியை மேலும் வலுப்படுத்த அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகளின் மாநாட்டையும் தேர்தல் கமிஷன் கூட்டியுள்ளது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks