வக்பு சட்டத்திற்கு முழுமையாக தடை இல்லை: ஆனால்... சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு! Supreme Court Stays Part of Waqf Act

வக்பு சட்டத்திற்கு முழுமையாக தடை இல்லை: ஆனால்... சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு!  Supreme Court Stays Part of Waqf Act

தனிப்பட்ட குடிமக்கள் உரிமை பற்றி முடிவெடுக்க கலெக்டரை அனுமதிக்க முடியாது!'' - வக்பு திருத்தச் சட்டத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி!

மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகளில், முழுமையான தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டபோதிலும், கலெக்டர்களுக்கு அதிகாரம் வழங்கும் முக்கிய விதிக்கு இடைக்கால தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள், த.வெ.க., இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் தனி நபர்கள் என மொத்தம் 72 ரிட் மனுக்கள் இந்தச் சட்டத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் முன்பு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றபோது, தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், இந்தச் சட்டம் மத உரிமைக்கு எதிராக இருப்பதாக வாதிட்டார். இதற்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் நீண்ட ஆய்வுக்குப் பிறகே இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.

இன்று இந்த வழக்கு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் வக்பு திருத்தச் சட்டத்திற்கு முழுமையான தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். எனினும், "தனிப்பட்ட குடிமக்கள் உரிமை பற்றி முடிவெடுக்க ஒரு கலெக்டரை அனுமதிக்க முடியாது" என்று அழுத்தமாகத் தெரிவித்தனர். அத்துடன், வக்பு நிலம் தொடர்பாகக் கலெக்டருக்கு அதிகாரம் தரும் விதிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், வக்பு சொத்துகளை அளிப்போர் 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும் என்ற சட்டப்பிரிவுக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மத்திய வக்பு வாரியத்தில் 4 இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்களுக்கு மேலாகவும், மாநில வக்பு வாரியத்தில் 3 இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்களுக்கு மேலாகவும் இருக்கக்கூடாது எனவும் நீதிபதிகள் முக்கிய முடிவை அறிவித்தனர்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks