சென்னை ஐ.டி. ஊழியர் வழிப்பறி: திருநங்கையர் இருவர் கைது! Transgenders Arrested for Robbing Gold Chain of an IT Employee in Chennai

சென்னை ஐ.டி. ஊழியர் வழிப்பறி: திருநங்கையர் இருவர் கைது! Transgenders Arrested for Robbing Gold Chain of an IT Employee in Chennai

கத்தியைக் காட்டி மிரட்டி 2 சவரன் சங்கிலி, பணம் கொள்ளை; சிசிடிவி காட்சிகள் வெளியானது!

இரவு நேரக் காட்சியைப் பார்த்துவிட்டு அதிகாலையில் நடந்து சென்ற ஐ.டி. ஊழியரிடம் கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இரு திருநங்கைகளைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை, திருநின்றவூரைச் சேர்ந்த ஜெஸ் ஆலன் ரொசாரியா, 24, என்பவர் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி, அரும்பாக்கத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 10-ஆம் தேதி இரவு காசி திரையரங்கில் சினிமா பார்த்துவிட்டு, மறுநாள் அதிகாலையில் காசி எஸ்டேட் தெரு வழியாக அவர் நடந்து சென்றுள்ளார்.

அப்போது, அவரை வழிமறித்த இரு திருநங்கைகள் அவரிடம் பணம் கேட்டுள்ளனர். பணம் இல்லையென ஜெஸ் ஆலன் ரொசாரியா கூறியதால், கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 2 சவரன் தங்கச் சங்கிலியையும், அலைபேசி செயலிமூலம் 300 ரூபாயையும் பறித்துச் சென்றுள்ளனர்.

ஜெஸ் ஆலன் ரொசாரியா அளித்த புகாரின் பேரில், எம்.ஜி.ஆர். நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதில், ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த திருநங்கைகளான சாந்தி, 28, மற்றும் சாய்னா, 19, ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks