நகைகள் இல்லாததால் வெறும் கையுடன் திரும்பிய கொள்ளையன்; சிசிடிவி காட்சிகள் வெளியானது!
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் முத்துமாரியம்மன் கோவிலில் பூட்டை உடைத்துக் கொள்ளை முயற்சி நடந்த நிலையில், அருகில் உள்ள டீக்கடை ஒன்றில் 5 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
பழனியில் நள்ளிரவு நேரத்தில் டீக்கடை ஒன்றின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர், திருப்புளியால் கல்லாப்பெட்டியை உடைத்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
இதேபோல், பழனி அருகே உள்ள தட்டான்குளத்தில் முத்துமாரியம்மன் கோவில் பூட்டை உடைத்த மர்மநபர், உள்ளே நகைகள் எதுவும் இல்லாததால் வெறும் கையுடன் திரும்பிச் சென்றுள்ளார்.
இந்த இரண்டு சம்பவங்களும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.