சபரிமலை நடை திறப்பு: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! புரட்டாசி மாத பூஜைக்காக நாளை நடை திறக்கப்படுகிறது! Sabarimala Temple Opening September 16

சபரிமலை நடை திறப்பு: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! புரட்டாசி மாத பூஜைக்காக நாளை நடை திறக்கப்படுகிறது! Sabarimala Temple Opening September 16

செப். 21 வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்; ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வது அவசியம்!

புரட்டாசி மாத மாதாந்திர பூஜைக்காக, பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (செப்டம்பர் 16) திறக்கப்பட உள்ளது. ஐயப்ப சுவாமியைத் தரிசிக்க வரும் பக்தர்கள் புதிய கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை நடை திறக்கப்படும் நிகழ்வை ஒட்டி, தமிழகம் உட்படப் பல மாநிலங்களிலிருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்குச் செல்லத் தயாராகி வருகின்றனர். இந்த மாத பூஜைக்காகச் செப்டம்பர் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என்றும், செப்டம்பர் 21-ஆம் தேதிவரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஐயப்ப பக்தர்கள், வெர்ச்சுவல் கியூ எனப்படும் ஆன்லைன் முன்பதிவு முறைப்படி மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். எனவே, பக்தர்கள் www.sabarimalaonline.org என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து தங்களது பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks