மதுரை சிறுவன் மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்; 5 பேருக்கு மறுவாழ்வு! Boys Brain Death Leads to Organ Donation

மதுரை சிறுவன் மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்; 5 பேருக்கு மறுவாழ்வு!  Boys Brain Death Leads to Organ Donation

விபத்தில் சிக்கிய ஆனந்த போதி குமரன்; அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது!

சிக்கி மூளைச்சாவு அடைந்த பள்ளிச் சிறுவன் ஒருவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதன் மூலம், ஐந்து பேருக்குப் புதிய மறுவாழ்வு கிடைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஆனந்த போதி குமரன், 15, பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி இரவு இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் தலையில் பலத்த காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று அதிகாலை மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, மகனின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கத் தந்தையான ராஜேந்திரன் சம்மதம் தெரிவித்தார். அதன்படி, சிறுவனின் கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் திருச்சி காவேரி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் மதுரை வேலம்மாள் மருத்துவமனைக்கும், இரண்டு கருவிழிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.

சிறுவனின் இந்தத் தியாகத்தின் மூலம் ஐந்து பேருக்குப் புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது. சிறுவனின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks